சில சம்பவங்களால் மனம் வித்யாசமாய் சிந்திக்கும் வேளையில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருக்கும். எனக்கு எப்போதாதவது இப்படி தோன்றும்.அன்று ஏனோ கோவிலுக்குச் சென்று சற்று அமைதி தேட மனம் அழைந்தது. நல்ல தரிசனம் சிறிது நேரம் குருக்கள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தீபம் காண்பித்தவுடன் எனதருகில் இருந்தோர் 10ரூ நோட்டுகளை தட்டில் போட்டனர். நான் அரிதாக தான் சில்லறைகளைப் போடுவதுண்டு. திரும்பி குருக்கள் தட்டில் பூ, பழங்களோடு வந்தார். நான் நினைத்தது நடந்தது. 10ரூ போட்டவர்களுக்கு பூ பழமும் , எனக்கும் மற்ற சிலருக்கும் பூ மட்டும் கொடுத்தார். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இந்நிகழ்வு என்னுள் சற்று சலனத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பெரிய கோவில்களில் கொடுக்கும் பணத்திற்க்கேற்ப சுவாமிக்கு அருகிலோ தொலைவிலோ(!?) அனுமதிக்கப்படுவர். ஏன் இந்த ஏற்றத்தாழ்வு கோவில்களிலும்? பணத்திர்க்கேர்ப்பதான் இவ்வுலகில் எல்லாம் நடைபெறும் என்றாலும் சன்னதிகளிலும் இவ்வாறு நடைபெற வேண்டுமா?
கோவிலைப்பற்றி சொல்லும்போது இன்னொரு சேதி நினைவிற்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உயிரிழப்பு,நந்தா தேவி கோவிலில் கூட்ட நெரிசலால். நம்மை காக்க வேண்டிய தெய்வம் முன்நிலையில் இப்படி நடைப்பெற்றது ஒரு நிமிடம் தெய்வம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழச்செய்கிறது. விடைதான் தெரியவில்லை!!!
Tuesday, November 11, 2008
Thursday, November 6, 2008
Subscribe to:
Posts (Atom)