Showing posts with label Song. Show all posts
Showing posts with label Song. Show all posts

Wednesday, November 24, 2010

என்ன குறையோ ...

என்ன குறையோ என்ன நிறையோ என ஆரம்பிக்கும் இந்த பாடல் கவிஞர் அறிவுமதியின் எழுத்துக்களில் மந்திர புன்னகை படத்தில் இடம் பெற்றுள்ளது। சுதா ரகுநாதன் அவர்களின் தேனினும் இனிய குரலில் கண்ணனை பற்றி கேட்க கேட்க திகட்டமால் இருக்கிறது. கண் மூடி கேட்கையில் மெய்சிலிர்கிறது, கண்ணன் வானுலகில் இருந்து வந்துவிட்டானோ என தோன்றுகிறது. கர்நாடக சங்கீத பின்னணியில் என்ன அருமையாக இசை அமைத்துள்ளார் வித்யாசாகர். எத்தனை முறை கேட்டுவிட்டேன்!!!ஒவ்வொரு முறையும் வேறு உலகத்திற்கு சென்றது போல் உணர்வு. கண்ணீர் தானாக வடிகிறது...