காலைல எழுந்திரிக்கறதுல இருந்து நைட் தூங்கற வரைக்கும் எல்லாமே பணம் பணம் தான். ஊருபக்கம் ஏதோ படிப்ப முடிச்சிட்டு ஒரு வேலையோடவோ வேலை தேடியோ Bangalore வரோம். வந்த புதுசில புது ஆபீசும் சரி, பெரிய பெரிய மால், பில்டிங், கார்னு நம்மை அசர வைக்கிது, போக போக அதுவும் பழகதான் செய்யுது, அப்புறம் இது தான் நம்ம ஊருன்னு ஆகிப்போகுது. கைல கொஞ்சம் காச பாத்தவுடனே போன் மூலமாவும், மெயில் மூலமாவும் எதாவது ஒரு insurance companyயோ, ஷாப்பிங் சைட்யோ, கிரெடிட் கார்ட் அவங்க products வாங்க சொல்லி தொறத்துது.
மளிகை சாமான்கூட மக்களுக்கு வண்டில தள்ளிட்டேபோய் தேவையோ இல்லையோ பார்க்கிறதெல்லாம் வாங்க ஆசைதான். அங்க இருக்குற பொருள் எல்லாமே Mrp தான். Mrpங்கறது அதிகபட்ச விலைதானே தவிர அதே விலைக்கு விற்கவேண்டிய அவசியம் இல்லை. இதே பொருள் அதே தரத்தோட நம்ம வீட்டு பக்கத்ல இருக்கிற நாடார் அண்ணன் கடைல கம்மியா நியாய விலைல கிடைக்கும். சூப்பர் மார்க்கெட்ல மக்களை கவர்ரதுக்காக பல offer குடுக்கறாங்க, memership கார்டு வாங்கினா points add ஆகும், ஒரு அளவிற்கு points கிடைச்சதும் அதுக்கு ஏத்த மாதிரி சாமான் வாங்கிக்கலாம். கூட்டி கழிச்சு பாத்தா நமக்கு கிடைக்கிற discount 1% க்கும் கம்மி தான். மிடில் கிளாஸ் மக்களுக்கு இதெல்லாம் புரியரதில்லை. அவங்களும் எது சரியான விலைனு ஆராய்ச்சியா பண்ண முடியும்? எல்லா பக்கமும் விளம்பரம் ஸ்கூல், காலேஜ்னு படிப்புக்கூட வியாபாரமாகி ரொம்ப நாள் ஆச்சு . இதெல்லாம் பாக்கறப்போ நம்ம ஊர் பக்கம் போய்டலாம்னா அதுவும் சிட்டி மாதிரி ஆகுறதுக்கு ரொம்ப நாள் ஆகாது. கடுகுல இருந்து ப்லைட் வரைக்கும் எல்லாமே அநியாய விலை.
நமக்கும் நகர வாழ்க்கை பழக்கப்பட்டு நம்ம ஊருன்னு ஆகரப்போ ஒரு வீடு வாங்கலாம்னு எல்லாரும் நினைக்கிறோம். வீடு எப்படி வாங்கறது யார அனுகறது? அதான் முக்குக்கு முக்கு எதாவது ஒரு builder விளம்பரம் பண்றாங்களே. City க்கு ரொம்ப பக்கத்தில, எல்லா வசதியோடனு. அங்க போய் பாத்தா தான் தெரியும் கொறஞ்சது 20 km தாண்டி அப்படியே அடுத்த ஊருக்கு போய்டலாம். அப்படியே எதாவது வீடு வாங்கலாம்னு பாத்தா இவங்கள நம்பி எப்படி வீடு வாங்கறது. நாளைக்கு எதாவது பிரச்சனைனா இவங்க என்னன்னாவது கேப்பாங்களா, இல்ல அதுக்கும் எதாவது terms and conditions நமக்கு புரியாத மாதிரி போட்டிருப்பாங்களோ! ஒரு வீடு இருக்கவேண்டிய இடத்துல 10 வீடு கட்டினா நிலத்தடி நீர் எங்க போகும். இப்பவே Bangaloreல பல இடத்துல நிலத்தடி நீரெல்லாம் குறைஞ்சுருச்சு பஞ்சம் ஆகிருச்சு. ஆசையாசையாய் மனை வாங்கி plan போட்டு, ஒவ்வொரு செங்கலா எடுத்து வச்சு wait wait எல்லாம் கனவுதான்னு சொல்லவரேன். இதெல்லாம் நினைக்காம கூவிக்கூவி குடுக்குற பேங்க்ல லோன் போட்டு நம்ம மிடில் கிளாஸ் மாதவனோ மாதவியோ ஒரு வீட வாங்கி போட்டுடறாங்க. வாங்கின கடனுக்கு 20 வருஷம் Emi கட்டனுமேனு 100 ரூபாய் கூட செலவு பண்ண யோசிச்சிட்டு காலத்த ஓட்டவேண்டிருக்கு. இந்த 20 வருஷத்ல என்னலாம் நடக்குமோ.
சரி வீடு வாங்கியாச்சு, அடுத்த சும்மா இருப்போமா? வீடு வாங்கறப்ப carparking சேத்து தான் பணம் கட்டிருக்கோம், அது சும்மா கெடக்கலாமானு, இவ்ளோ பெரிய வீட்டுக்கு ஒரு மரியாதை வேண்டாமான்னு மத்த car பக்கத்துல நம்ம carஉம் நிக்கட்டுமேனு நெனப்பு வரும். திரும்பவும் ஒரு car loan போட்டு car வாங்க வேண்டியதுதான். Trafficல நிக்கற லட்சகணக்கான carல இப்போ நம்ம car உம் சேந்தாச்சு.
மரத்த எல்லாம் வெட்டியாச்சு, பல்லாயிரம் வீடு கட்டியாச்சு, பல லட்சம் car ரோட்ல ஓடுது. வண்டி ஓடுதுங்கரதவிட நகருதுனு சொன்னா சரியா இருக்கும். Bachelors வாழ்கையும் இப்படித்தான் loan போட்டு ஒரு வண்டி வாங்கினா traffic policeக்கு வேற அப்ப அப்ப தானம் பண்ண வேண்டிஇருக்கு . No parking அது இதுனு எதாவது ஒரு காரணம், park பண்ண இடம் இருந்தா தான் அங்க பண்ணுவோம்ல. அடுத்த pollution வேற, எவன் வண்டில இருந்து வர புகைக்கு நம்ம மூஞ்சு மூக்கெல்லாம் மூடிட்டு போக வேண்டி இருக்கு. வீட்ல இருந்து கிளம்புறப்போ ஏதோ terroristஅ பாத்த look விடறாங்க.
ஏழை ஜனங்க இந்த மாய நகரத்துல எப்படி காலம் தள்ளுரான்களோ.இயந்திர வாழ்க்கைல நம்மளும் ஓடிகிட்டே இருக்கோம் எதைத் தேடிதானு தெரியல.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
One of the best posts so far!! The mix of tamil and english is so apt in your post!!! Namma paakra, seithu kondu irukira vishayatha...light pottu kaatiruka. ;)
Thanks Kishore
Post a Comment